கொரோனா பேரிடர் உதவி மையத்தை துவங்கியுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் .!

     -MMH
      கோவையில் கொரோனா பேரிடர் உதவி மையத்தை துவங்கியுள்ளனர் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் .!

கோவை உக்கடம் அருகே பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் உதவி மையத்தை நேற்று காலை உக்கடம் அருகே உள்ள கோட்டை மேட்டில் (covid relief centre) துவங்கியுள்ளது.

பொதுமக்கள் இந்த கொரானா பேரிடர் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments