பொள்ளாச்சி அதிமுக வெற்றிக்கு கைகொடுத்த கிராமத்து வாக்காளர்கள்!!

   -MMH

பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்கு கிராமத்து வாக்காளர்கள் கைகொடுத்தனர். நகராட்சி பகுதியில் தி.மு.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் டாக்டர் வரதராஜன் களமிறக்கப்பட்டார். 

இதனால் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் கிராமப்புறங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் முதல் சுற்றில் இருந்தே, அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார். 12-வது சுற்று வரை அ.தி.மு.க. 7,906 வாக்குகள் முன்னிலையில் இருந்தது. இதனால் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது.

ஆனால் நகரத்தையொட்டி உள்ள ஆச்சிப்பட்டியில் தொடங்கி, நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு தி.மு.க. வேட்பாளர் வரதராஜன் கை ஓங்கியது. இறுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 1725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

கிராமத்து வாக்காளர்கள் கைகொடுத்ததால் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற முடிந்தது. இந்த தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள 112 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு 25 வாக்குச்சாவடிகளில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்தன. 20-வது வார்டில் மட்டும் ஒரு பூத்தில் 134 வாக்குகள் அதிகம் பெற்றி இருந்தார். மற்ற பூத்களில் தி.மு.க. வேட்பாளர் வரதராஜனின் கையே ஓங்கியது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி .

Comments