சாலையில் தொங்கும் முள் செடிகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்..!!
கோவை மாவட்டம் மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் காலனி பகுதியில் சாலையின் நடுவே முட்புதர்கள் மண்டி கிடப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல் மின்கம்பி மீதும் முட்புதர்கள் உரசி செல்வதால் மக்கள் மிகவும் அச்சத்துடனே இவ்வழியே செல்கின்றன இதுகுறித்து.
பேரூராட்சி நிர்வாகமும் மின் வாரியத் துறையும் இங்கு குவிந்துள்ள முள் செடிகளை உடனடியாக அகற்றி மக்களுடைய அச்சத்தைப் போக்கும்வகையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஷாஜகான் ஈசா.
Comments