பொது ஊரடங்கு காலத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் மன்னை காவல்துறை!!

   -MMH

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி:

                கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு என்பதை இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் மன்னார்குடியில் முக்கிய அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் கடைகளில் கூட்டம் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகரிப்பதைக் கண்டு கண்கானிப்பிற்காக வந்த காவல்துறை டிஎஸ்பி. திரு.இளஞ்செழியன் அவர்கள் கடைகளின் உரிமையாளர்களுக்கு அவதாரம் விதித்து எச்சரிக்கை செய்து பொதுமக்களுக்கும் கொரோனாவின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்பது வரை கூறி எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பொது ஊரடங்கு காலத்தில் இவ்வாறு வெளியே செல்வது என்பது எவ்வளவு தவறான செயல் என்பதை எடுத்துக்கூறி எச்சரித்தார். மன்னார்குடி டிஎஸ்பி அவர்களின் இந்த செயல் மன்னை  நகர மக்களுக்கு காவல்துறையின் மீது ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புடன் சமூக அக்கறை உடையவனாக கொரோன வை  எதிர்ப்போம் சமூக நலன் காண்போம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரைட் ரபிக், ஈசா.

Comments