கோவை ஆத்துப்பாலம் மாநகராட்சி மின் மயானத்தில் இன்று முதல் சடலங்கள் தகனம் செய்யப்படும்!!

     -MMH
     கோவை ஆத்துப்பாலம் மாநகராட்சி மின் மயானத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த ஐந்து நாட்களாக சடலங்களை இங்கு எரிக்கப்படாமல் இங்கு வரும் சடலங்களை நஞ்சுண்டாபுரம் ரோடு, பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட மின் மயானத்திற்கு அனுப்பி வந்தனர். இதனால்  இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

ஆத்துப்பாலம் மின் மயானம் மூடப்பட்டதால் மற்ற மின் மயானங்களில் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பல மணி நேரம் காத்திருந்து எரிக்க வேண்டியிருந்ததால்  உறவினர்களும் பொதுமக்களும் மேலும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து மாநகராட்சி  நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில் "ஆத்துப்பாலம் மின் மயானத்தில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் கடந்த ஐந்து நாட்களாக சடலங்கள் ஏரிக்கப்படவில்லை பணிகள் முடிந்து விட்டது. இன்று முதல் சடலங்கள் தகனம் செய்யப்படும் குறிப்பாக நோய்த்தொற்று பாதித்தவர்களின் சடலங்களும் தகனம் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

-M.சுரேஷ்குமார்.

Comments