சிங்கம்புணரியை திடீரென குளிர்வித்த மழை!

     -MMH
    கொரோனா தொற்றுகால ஊரடங்கில் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், வெயிலும் தன் பங்கிற்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சிங்கம்புணரியில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை திடீரென மேகங்கள் சூழ்ந்து காற்று வேகமாக அடிக்க தொடங்கியது.

ஒன்று கூடிய மேகங்கள், சற்றுமுன் மழையாக மாறி, சிங்கம்புணரி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

ஆளரவமற்ற சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த மழையினால் வெப்பம் சற்று தனியா வாய்ப்பு உள்ளதாக மக்கள் மனம் மகிழ்கிறார்கள்.

- பாரூக் & ராயல் ஹமீது.

Comments