கடுமையான காய்ச்சல், கணவன் இறப்பு.. தகவலறிந்த மனைவி உயிரிழப்பு.. சோகத்தில் ஊர் மக்கள்!!
அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (79). இவர் அம்பத்தூர், வெள்ளாளர் தெருவில் பேப்ரிகேஷன் கம்பெனி நடத்தி வந்தார். இவரது மனைவி கற்பகம் (69). சில தினங்களுக்கு முன் கற்பகத்துக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது. இதுபோன்ற அறிகுறிகள் அவரது கணவருக்கும் இருந்தது. இதையடுத்து டாக்டர்கள் ஆலோசனையின்படி, இருவரும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 22ம் தேதி நந்தகோபால், கற்பகம் ஆகியோருக்கு உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து உடனடியாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் நேற்று அதிகாலை 2மணி நந்தகோபால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் கற்பகமும் பரிதாபமாக உயிரிழந்தார்.
-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.
Comments