தொழிலாளி விஷ மருந்து குடித்து தற்கொலை!!

   -MMH

ஆனைமலை  சரளைப்பதியை சேர்ந்த துரையன் மகன் பிரகாஷ் (23) கூலித்தொழிலாளி. இவருக்கு ஓராண்டுக்கு முன் திருமணமாகி, மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில், அதீத குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் பிரகாஷை கண்டித்துள்ளனர். இதனால், மனவிரக்தியடைந்தவர் நேற்று மதியம், மதுபானத்தில் விஷ மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments