ஊரடங்கும் போது உணவின்றி தவிப்போருக்கு உதவிய மக்கள் இயக்கம்..!!

     -MMH
     கோவை மாவட்டம் வால்பாறை நேற்றைய தினம் ஊரடங்கு என்பதால் 'வால்பாறை மக்கள் இயக்கம்' சார்பாக உணவின்றி தவிக்கும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கும் 108 வாகனம் இயக்கம் ஓட்டுநர்களுக்கும் சாலையோரத்தில் யாரும் இல்லாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கும் காலை உணவு - இட்லி, மதியஉணவு - சாம்பார் சாதம்,வெஜிடபிள் பிரியாணி, முட்டை இரவு உணவு - தக்காளிசாதம் என்று 130 பேர்களுக்கு வழங்கி உதவிய  வால்பாறை மக்கள் இயக்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று  பேரிடர் காலத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வால்பாறை மக்கள் இயக்கத்திற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்ய குமார், ஈசா.

Comments