நீடாமங்கலம் பகுதியில் வீடுகளுக்கே, சென்று காய்கறி விற்பனை மக்கள் மகிழ்ச்சி..!!

 

-MMH

    முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் அரசால் ஏற்படுத்தப்பட்ட தளர்வினால் அதிக விலையில் காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன. ஊரடங்கு ஒரு வார காலம் இருப்பதால் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என அரசு கருதுகிறது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் வர்த்தக சங்கமும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து காய்கறி வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, அவரவர்களுக்கு குறிப்பிட்ட வார்டு பகுதிகளை ஒதுக்கி, அப்பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அரசும் அவ்வப்போது விலைப்பட்டியலை வழங்கிவருகிறது அதற்குமேல் கூடுதல் விலையில் விற்கக்கூடாது அப்படி ஏதாவது பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப் பெற்றால்  உரிமை ரத்து செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர். அரசின் இந்த செயல்பாடு பொதுமக்களின் பாராட்டை பெரும் விதமாக அமைந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-திருமலைக்குமார், ரைட் ரபிக், ஈசா.

Comments

நல்ல முன்னெடுப்பு...