கோவை மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு!!

 -MMH

தமிழகத்தில் நோய்த்தொற்றின் வேகம் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இடமில்லாமல் நோயாளிகள் அவதிப்பட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை  ஈ. எஸ். ஜ மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். 

புதிய நோயாளிகளுக்கு இடமில்லாமல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வெளியில் காத்துக் கிடக்கின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வெளியில் காத்து இருக்கும் நோயாளிகள்.

இது குறித்து  கோவை மக்கள் விழிப்புணர்வு அமைப்பினர்  கூறுகையில்,  நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கட்டுப்பாடுகள் ஏராளமாக போடப்பட்டு வந்தாலும் இந்த பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாம்  அலை எதிர்பார்க்காததை விட ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. எனவே, கட்டுப்பாடுகள் மட்டும் போதாது புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட வேண்டும். விரைவில் ஆலோசித்து  முழு லாக்டவுன் போட  உத்தரவிட வேண்டும், மக்கள் நலனுக்காக என்கிறார்கள்.

-M.சுரேஷ்குமார்.

Comments