கோவையில் சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது!
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த 10 வயது சிறுமி மே 9ம் தேதி தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மயங்கிய நிலையில் கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பீளமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமி கொடுத்த தகவல்படி பீளமேட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரா 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
-அருண்குமார்.
Comments