சிறு கீரையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!!

  -MMH

சிறு கீரையை தினமும் சமைத்து சாப்பிட இரும்பு சத்து அதிகரிக்கும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கீரையை எடுத்துக் கொண்டால் உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும்.

சிறுகீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலப்படும். நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துக்களும் இந்த கீரையில் அடங்கியுள்ளது.

சிறுகீரையை தொடர்ந்து கொடுத்து வர எரிச்சல் தணியும், மூலநோய் கட்டுப்படும், வாயு மற்றும் வாத நோயை அகற்றும்.

மாலைக்கண் நோய் குணமாகும். சிறு கீரை உடலுக்கு அழகையும் பொலிவையும் தரக்கூடியது. சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.

சிறு கீரையுடன் முந்திரிப் பருப்பு மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சிறு கீரை சிறந்த மருந்து.

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து தேய்த்துக் கொண்டால் சொறி, சிரங்கு, படை போன்ற நோய்கள் குணமாகும் இதுபோன்ற கீரைகளை மக்கள் அதிகம் எடுத்துக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்று முன்னோர்கள் கூறியது இன்று நமக்கிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

நாளை வரலாறு செய்திக்காக,

-L.குமார் ஆரோக்கியராஜ்.

Comments