புதிய முதல்வரிடம் திரைப்படத்துறையினர் கோரிக்கை..!!

 -MMH

மே 6 ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் திரையரங்குகள் முற்றிலும் செயல்படாது என்று அறிவிப்பு வந்துள்ளது.

இதனால் தமிழ்நாடு திரையரங்குகள்  உரிமையாளர் சங்கம் தலைவர் திருப்பூர்  சக்தி சிதம்பரம் அவர்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பு. தமிழகத் தேர்தலில் மாபெரும் வெற்றி  பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும்  வெற்றி பெற்ற அனைத்து திமுக வேட்பாளர்களுக்கும்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

திரைத் துறையினருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பல உதவிகள் செய்தது போல... மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களும் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும்  நலிவடைந்த திரையரங்கு உரிமையாளர்களின் சொத்துவரி,  தொழில்வரி, மின்சாரம் கட்டணம் மற்றும் உள்ளூர் வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நாளை வரலாறு செய்திக்காக,

-திருப்பூர் குமார், ஈசா.

Comments