சுகாதார பணியாளர்களை பாராட்டும் பொதுமக்கள்..!!

-MMH

            கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் சுமார் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும்ல நிலையில் மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

நோய்தொற்று  மேலும் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் தன் உயிரை துச்சமென எண்ணி ஆனைமலை பேரூராட்சி சுகாதார பணியாளர்கள்  பேரூராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை அனைத்து விதிகளுக்கும் மற்றும் வீடுகளுக்கும் சென்று அப்புறப்படுத்தி வருகிறார்கள் நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சமயத்தில் அர்ப்பணிப்போடு தங்கள் பணியை செவ்வனே செய்து வரும் சுகாதார பணியாளர்களை  பொது மக்களும் அதிகாரிகளும் மனதார பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.சசிகலா,ஆனைமலை.


Comments