ஊர் பெயரை தவறாக எழுதிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்!!

   -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கிழவன் புதூர் பகுதிக்கு செல்ல ஆனைமலையில் இருந்து செம்மேடு மாரப்ப கவுண்டர் புதூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மைல்கல் வைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்பொழுது  மைல் கல்லில் கிழவன் புதூர் என்பதற்கு கழவன் புதூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைக்கண்ட இப்பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர். மேலும் கிழவன் புதூர் மக்கள் தங்களின் ஊர் பெயரை கழவன் புதூர் என்று எழுதி உள்ளதை கண்டு வருத்தத்தில் உள்ளனர். மேலும் கிழவன் புதூர்  பகுதிக்கு புதிதாக வரும் நபர்கள் குழப்பத்தில் நின்று செல்கின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தவறை திருத்த வேண்டும் என கிழவன் புதூர் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

-S.சசிகலா, ஆனைமலை.

Comments