திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி!! - ஏற்றுமதியாளர் சங்கம் அட்வைஸ்!!

     -MMH

திருப்பூர் : பின்னலாடை தொழிலாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலைகளில் போட்டுக்கொள்ள அனைத்து  நிறுவனங்களும்  ஏற்பாடு செய்யவேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது .

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: - திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், தொழில் அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர். அவரது அறிவுரைப்படி, நிறுவனங்கள், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ளவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில், தொடர் தடுப்பூசி முகாம்கள் நடத்திவருகின்றன.அவர்களுடன் இணைந்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி போடச்செய்யவேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு குறித்த புரளிகளை புறந்தள்ளவேண்டும். கொரோனா குறித்த எதிர்மறை தகவல்கள் அதிகம் பரவுகின்றன. இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் கைநழுவுகின்றன.

கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள்; குணமடைந்தோர் எண்ணிக்கை என, நேர்மறை தகவல்கள் அதிகம் வெளியிடப்படவேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது; நேர்மறை தகவல்கள் வெளியிடப்படும் என, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

குமார் திருப்பூர்,

Comments