கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது !!

    -MMH
    கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் வயது(21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

மணிகண்டன் சிறுமியிடம்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தர்மபுரிக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மணிகண்டனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை  கடத்தி சென்ற மணிகண்டன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments