நீண்ட நாளாக மூடியிருந்த பள்ளியை திறக்க கோரி மக்கள் கோரிக்கை!!

    -MMH
     கோவை மாவட்டம்  வால்பாறை அடுத்துள்ள மூடீஸ் பகுதியிலுள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 2500 மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது அப்பள்ளி செயல்பாட்டில் இல்லை யானைகள் புலிகள் கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பள்ளியில் தான் தற்போது தங்கியுள்ளன. இதனால் இவ்வழித்தடத்தில் செல்லும் பொதுமக்கள் பயத்துடனும் பயணிக்கின்றனர்.

இந்தப் பள்ளிக்கூடத்தை குறித்து அரசியல் தலைவர்களிடம் கூறியும்  அரசு அதிகாரிகளிடமும் பலமுறை தெரிவித்தும் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  ஐடிஐ அல்லது பாலிடெக்னிக்  ஆக மாற்ற வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில், திவ்யா குமார், ஈசா.

Comments