இவர்களைப்போன்றவர்களுக்கு உதவி கிடைப்பதில்லை ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்!!
ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. போத்தனுார் அருகே உள்ள ஆஸ்பெஸ்ட்டாஸ் வீதியில் வசிக்கும் பார்வையற்றவர்கள், அதிசயராகம் என்ற இசை கச்சேரி வாகனம் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பாடல்கள் பாடி அதில் வரும் பணத்தை வைத்து, அத்தியாவசிய தேவைகளை, பூர்த்தி செய்து வந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கச்சேரி நடத்துவதற்கு வாய்ப்பில்லாமல், வருமானம் இழந்து, உணவுக்கே வழியில்லாமல் தவிக்கின்றனர். ஊரடங்கில் பசியில் இருக்கும் பல ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பல தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தன்னார்வலர்கள், மாநகரின் முக்கிய இடங்களில் உணவு அளித்து வருகின்றனர். இவர்களை போன்றவர்களுக்கு, உதவி கிடைப்பதில்லை. இதனால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு, அரசு உடனடியாக உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
Comments