மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு!!!

     -MMH
      கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம், இ. எஸ். ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உக்கடம் காய்கறி மார்கெட், தியாகி குமரன் வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, ஆர். எஸ். புரம் சாஸ்திரி மைதானம் தற்காலிக பூமார்கெட் ஆகிய பகுதயில் இன்று வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எஸ். நாகராஜன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை மையங்களான கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம், இ. எஸ். ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அவர்கள், சிகிச்சை முறை குறித்தும், இப்பகுதிகளில் ஏறப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்தும், போதிய அளிவில் ஆக்சிஜன் மற்றும் பிரத்யேக மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து உக்கடம் காய்கறி மார்கெட், தியாகி குமரன் வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் ஆர். எஸ். புரம் தற்காலிக பூ மார்கெட் ஆகிய பகுதிகளில் கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மார்கெட்களுக்கு வருகை தரும் வியாபாரிகளும் பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை மாநராட்சி அலுவலர்கள் உறுதி செய்வதுடன், தினசரி தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகளின் அத்தியாவசியத் தேவைகளை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கூடுதல் தலைமைச் செயலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், காவல் துணை ஆணையர், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரித்தப்படுத்துவதுடன், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் திரு. பெ. குமாரவேல்பாண்டியன், மாநகர காவல் ஆணையாளர் திரு. ஸ்டாலின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வ நாகரத்தினம், உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி. சரண்யா, இ. எஸ். ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் திரு. ரவீந்திரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. நிர்மலா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு. ரமேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments