மருந்து அட்டைகளில் சிவப்பு குறியீடுகள் எதற்காக!!

      -MMH

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து அட்டைகளில் சிவப்பு போன்ற குறியீடுகள் எதற்காக என்று நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து அரசாங்கமும் சுற்றியுள்ள பிரபலங்கள் என அனைவரையும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இப்போது ​​கொரோனோ இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் தொற்று நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

நோய் பாதித்த ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்களை மாத்திரையுடன் தான் ஆரம்பிக்கின்றனர். இது உண்மையிலேயே மோசமான நிலைதான் நாம் ஒரு பொருட்களை உண்ணும் பொழுது அது எத்தகைய தன்மை உடையது என்பதை அறிந்து அவற்றை உண்ண வேண்டும். அப்படி உண்ணுவதன் நம் உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் விளைவிக்காது தவறினால் அது நம்முடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் சாப்பிடும் மாத்திரைகளை தவறான முறையிலேயே அதை நாம் உட்கொண்டு வருகிறோம். அதிலும் சிலர் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமலேயே மாத்திரையை உட்கொள்கின்றனர். அது போன்ற தவறுகள் பல நேரங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது உடம்பில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நாம் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது அத்தகைய மருந்துகளை சாப்பிடுவது தான் நம்முடைய உடல் நலத்திற்கும் நல்லது.

அதிலும் குறிப்பாக சிவப்பு கோடு போட்ட மாத்திரைகளை மட்டும் நாம் மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி சாப்பிடவே கூடாது. அதற்கான ஒரு எச்சரிக்கையாக தான் மருந்து அட்டைகளில் அந்த சிவப்புக் கோடுகள் போடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குறியீடுகளை நன்கு படித்தவர்கள் கூட மருந்துகளின் விளைவுகள் தெரியாமல் ஆன்டிபயோடிக் அதிகம் உடைய மருந்துகளை பயன்படுத்துகின்றனர். வரும் காலங்களில் நாம் அதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் மருந்து சாப்பிடும் பொழுது அலட்சியமாக இருக்க வேண்டாம் சில சமயங்களில் அது போன்ற காரணங்கள் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.

-சுரேந்தர்.

Comments