வால்பாறையில் சிறுத்தை மர்மமான முறையில் இறந்தது..!! அங்குள்ள வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!!

 -MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உருளிக்கள் கீழ்ப்பிரிவு தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வனத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வால்பாறை பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சிறுத்தைகளை பிடித்து கூட்டில் அடைத்து பின்னர் காட்டுக்குள் விட்டு வந்தனர். 

இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று இறந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் இறந்தது என்று தெரியாமல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

நாளை வரலாறு செய்திக்காக,

-திவ்யாகுமார், ஈசா.

Comments