நடுவானில் விமானத்தில் நடந்த மதுரை தொழில் அதிபர் இல்ல திருமணம்..!!

 

-MMH

   கொரோனா நோய்த்தொற்று பரவி மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வரும் இந்த வேளையில் நோய் பரவலை தடுக்கும்வகையில் திருமணங்களுக்கு குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொள்ள அரசு அனுமதி கொடுத்தநிலையில் திருமணத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்டு நடத்திய ஒரு வினோத திருமணத்தை இங்கே பார்ப்போம்.

மதுரை மாவட்டம் கோரிபாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழில் அதிபர் மகள் தீக்சனாஇருவீட்டார். சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டனர். 

இருவீட்டாரும் நன்றாக யோசித்து ஒரு வித்தியாசமான முறையில் திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.  அதன்படி மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்தனர். அதன்படி நேற்று காலை  7:30 மணியளவில் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 161 பேருடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. 

விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.  அந்த விமானம் நடுவானில் சென்ற போது உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அந்த விமானம் தூத்துக்குடிக்கு சென்று விட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. 

கடலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என்ற சம்பவம் எல்லாம் வெளிநாடுகளில் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் தற்போது தமிழகத்தில் அதுவும் மதுரையில் இதுபோன்ற திருமணத்தை நடத்தி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டார் மதுரை தொழில் அதிபர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன்,தூத்துக்குடி. .ஈசா.

Comments