கோவையில் சோகம்!!

 -MMH 

கோவை குறிச்சி சுந்தராபுரம் முத்தையா நகர் பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள கவுசிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.  இந்நிலையில் அப்பெண்ணுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இன்று மரணம் அடைந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு பாடியை எடுத்துச் செல்ல முற்பட்டபோது கணவனும் இரண்டு மகன்களும் மருத்துவமனை வாசலில் கத்திக் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜேஷ், கோவை.

Comments