நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆக்சிசன் கொடுத்து உதவிய ரோட்டரி சங்கங்கள்..!!

     -MMH
     திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 20 பேர், 24 மணி நேரமும் பயன்பெறும் வகையில் ஆக்சிஜன் கட்டமைப்பு, மக்கள் மகிழ்ச்சி. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை  அரசு மருத்துவமனையில் உடுமலை ரோட்டரி சங்கம் ,மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கமும்  இணைந்து நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி கட்டமைபை  உருவாக்கி உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 20 பேர் ,தொடர்ந்து 24 மணிநேரமும் பயன்பெறும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

இது இன்று மே 17-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது,  இதன் மூலம் உடுமலை அரசு மருத்துவமனையில் பல நோயாளிகள் பயன் பெறுவர். இதனை அமைத்துக் கொடுத்த ரோட்டரி சங்கத்தினருக்கு பொதுமக்களும், அரசு மருத்துவமனை ஊழியர்களும் நன்றியை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-குமார் திருப்பூர், ஈசா. 

Comments