கிணத்துக்கடவு பகுதியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்!!

     -MMH

    தமிழகத்தில் கொரோனா தொற்று  அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் போது அவ்வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த  முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் ரூபாய் 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments