ஊரடங்கும் போது சட்டத்துக்கு விரோதமாக மது விற்றவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

   -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் இட்டேரி பகுதியில் மது விற்ற வரை தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் கோரோனா என்னும் கொடிய நோய் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் மக்களை காக்கும் விதமாக அரசு பல்வேறு முயற்சிகளை சிறப்பாக எடுத்து வருகிறது.

நோய் பரவல் அதிகமாக காணப்படுவதால் ஆங்காங்கே உயிர்களை பறிகொடுத்து வருகிறோம் இந்நிலையில் அரசு 14 நாட்கள் பொது முடக்கம் ஊரடங்குஅறிவித்த நிலையில் மதுபானங்களை ஒரு சில நபர்கள் அதிக அளவில் வாங்கி தங்களுடைய வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக பெற்று வந்தது அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இதை தொடர்ந்து இட்டேரி பகுதியில் ஒருவரது வீட்டில் அதிக அளவில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டன இதை கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பீர்முகம்மது, ஈசா.

Comments