முன் களப் பணியாளர்களுக்கு வடை பாயசத்துடன் விருந்து.. நலவாழ்வு சங்கம் அசத்தல்..!!

 

-MMH

           கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வேண்டுகோளுக்கிணங்க இந்த கொரோனா என்னும் தொற்று நோய் தீவிரமாக பரவி மக்கள் உயிர்களை இழந்து பரிதவிக்கும் இந்த நேரத்தில் தங்களது உயிர்களை துச்சமாக எண்ணி முன் களப்பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், 


மின்சார பணியாளர்கள், மற்றும் குடிநீர் விநியோக பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நல வாழ்வு சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க   இன்று(21/5/21) வடை பாயாசத்துடன் மதிய விருந்து வழங்கப்பட்டது இந்த விருந்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கிய  Dr.ரெங்கநாதன், திருமதி சுந்தரி, திருமதி கல்பனா, திரு முரளி, திரு முத்து,  சுந்தர், மற்றும், A.ரஃபீக் T சுறாஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதனை ஏற்ற முன் களப்பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஈசா.தலைமை நிருபர்.

Comments