மின்கம்பம் மாற்றக்கோரி ஊர் மக்கள் கோரிக்கை..!!

  --MMH

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் பழுதடைந்த மின் கம்பம்பத்தை மாற்றி தர வேண்டுமென்று நீண்ட நாள் கோரிக்கையாக மக்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்  அலட்சியம் காட்டும் மின்சார ஊழியர்கள்.!

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் இதயச்சந்திரன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பம் முறிந்து வீட்டின் மீது விழுந்தால் உயிர்பலி ஏற்படும், ஆகவே மின்கம்பம் முறிந்து விழுவதற்கு முன்பே தக்க நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை அமைத்துத்தர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், ஈஷா.

Comments