ஊடகத் துறையில் பணியாற்றும் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்!!

  -MMH

தமிழகத்தில் செய்தித்தாள் காட்சி ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. 

செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழின் சார்பாக நல்வாழ்த்துக்கள்.

-M.சுரேஷ்குமார்.

Comments