பொள்ளாச்சி மீன்கரை சாலை என்றதுமே நினைவுக்கு வர வேண்டியது எது தெரியுமா!!

   -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆனைமலை மாசாணியம்மன் கோவில், டாப்ஸ்லிப், சேத்துமடை, அம்பராம்பாளையம் உள்ளிட்ட இடங்கள் தான். அதையும் தாண்டி அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு இடம் உள்ளது அந்த இடம் சீனிவாசபுரம் பாலம். இந்தப் பாலம் மேன் பாலமாக வரவேண்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சிலரின் சூழ்ச்சியால் சுரங்கப் பாதையாக உருவானதாக கூறப்படுகிறது. இந்தப் பாதை நேர்கோட்டில் அமைந்திருந்தால் பயணத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கும் என்கிறார்கள் வாகன ஓட்டிகள். ஆனால் பாதை வளைந்து நெளிந்து அமைந்துள்ளதால் ஒவ்வொரு நாளும் இந்தப் பாலத்தை கடக்கும் பொழுது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர் என்பது நிதர்சனம்.

இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் சாலையில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு குழியாக ஆக உருவெடுத்து இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை  விபத்துக்குள்ளாகி வருகிறது. மொத்தத்தில் இந்தப் பாலம் எல்லோரையும் பயமுறுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இச்செய்தி மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல விழிப்புணர்வுக்காக. இவ்வழித்தடத்தில் பயணிப்போர் மிகவும் கவனமாகவும் மிதமான வேகத்தில் பயணிக்கும் படி நாளைய வரலாறு புலனாய்வு இதழ் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

-M.சுரேஷ்குமார்.

Comments