உலகின் மிகப் பெரிய வாழை மரம்!!

     -MMH
      உலகின் மிகப் பெரிய வாழை மரம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

உலகின் மிகப்பெரிய வாழைப்பழம் பப்புவா நியூ கினி என்னும் நாட்டில் இது விளைவிக்கப்படுகிறது. நம்முடைய நாட்டில் இந்த ஒரு வாழைப்பழம் ஒரு குடும்பத்திற்கு போதுமானது மேலும் இதனுடைய மற்றொரு ரகசியம் என்னவென்றால் இந்த வாழைப்பழங்களை நாம் உண்பதற்கு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த வகையான வாழைப் பழங்கள் அனைத்தும் காட்டு வாழைப்பழங்களின் வகைகளை சார்ந்தவை.

இது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். இதில் பாப்புவா நியூ கினியா நாட்டில் காணப்படுவதுதான் பெரிய வாழை பழம் இனமாகும். இப்பெரிய மரத்தின் உயரம் 15 மீ உயரம், வாழை இலை 5 மீ நீளமுடையது, 1 மீ அகலமுடையது அதுமட்டுமில்லாமல் இந்த வகையான வாழை இலைகளை அந்நாட்டு மக்கள் தற்காலிகமாக தாங்கும் குடிசைகளின் மேற்கூரையில் பயன்படுத்துகிறார்கள். இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் சுற்றுலா பயணிகள் இந்த மரத்தினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வது வழக்கம்.

மேலும் இதுபோன்ற காட்டு வாழை மரங்களை ஆங்கிலத்தில் " Musa ingens " என்று அழைக்கின்றனர். பாப்புவா நியூ கினி, போசவி கிரேட்டர் என்னும் அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தவகை வாழை மரங்கள் வளர்கின்றன. மேலும் நம்மைச் சுற்றி காணக்கூடிய வாழை மரங்களை விட இந்த வகையான வாழை மரம் மிகவும் மாறுபட்டதாக இருக்கும். இது பப்புவாவின் மிகப்பெரிய வாழை மரம் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும். இதுபோன்ற வாழை மரங்களில் இருந்து சாகுபடி செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் ஆனால் இதனுடைய தன்மை என்பது மற்ற வகையான வாழைப்பழங்களை விட முற்றிலும் மாறானது என்றும் கூறுகின்றனர்.

-சுரேந்தர்.

Comments