பொள்ளாச்சி அருகே சூறாவளி காற்றுக்கு வீடு சேதம்..!!

     -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூறாவளி காற்றுக்கு மரங்கள் பெயர்ந்து விழுந்து, பழங்குடியின மக்களின், 12 குடியிருப்புகள் சேதமடைந்தன. பாறைக்குகைகளில் மக்கள் பதுங்கியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பொள்ளாச்சி ஆழியாறு அருகே சின்னார்பதி வனக்கிராமம் உள்ளது. இங்கு, 43 வீடுகள் உள்ளன.'டவ்டே' புயல் காரணமாக, பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை அதிகரித்ததால், சின்னார்பதி மக்கள், பாறைக்குகைகளில் தஞ்சம் அடைந்தனர். 

சூறாவளி காற்றுக்கு, மரங்கள் பெயர்ந்து வீடுகளில் மீது சாய்ந்தன. அதில், 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கிருந்த மக்கள் பாறைக்குகைக்கு சென்றதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு பகுதியில் உள்ள மண்டபத்தில், பழங்குடியின மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் வருவாய்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தற்போதும் மழை பெய்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments