பொள்ளாச்சியில் அவசர பணிக்காக நாளை மின்தடை..!!

     -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உயர் அழுத்த மின்பாதையில், அவசர பராமரிப்பு மேற்கொள்ள இருப்பதால், நாளை (20ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நல்லப்பா நகர், அம்பராம்பாளையம், ஆச்சிபட்டி, புளியம்பட்டி மற்றும் சங்கம்பாளையம் ஆகிய, ஏழு உயரழுத்த மின்பாதைகளில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதனால், நாளை (20ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை, பொள்ளாச்சி நகரம் மற்றும் டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ராசக்காபாளையம், ஆலாம்பாளையம், ஆச்சிபட்டி, ஆ.சங்கம்பாளையம், நல்லுார், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் அம்பராம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என  மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments