சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உபகரணங்கள்! வட்டாட்சியரிடம் வழங்கிய தனியார் நிறுவனம்!

 

-MMH

             அதிகரித்துவரும் கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக,  பாதிப்படைந்தவர்கள், சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா மருத்துவமனையை அணுகுகின்றனர். எனவே அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனை அறிந்த சிங்கம்புணரி எம்.எம்.போர்ஜிங்ஸ் என்ற மெட்ராஸ் மோட்டார்ஸ் தனியார் நிறுவனம், நேற்று இரண்டு ஆக்சிஜன் உபகரணங்களை வழங்கியது. ₹.60 ஆயிரம் மதிப்புள்ள இந்த இரண்டு இயந்திரங்களையும் சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசிடம் வழங்கினார்கள். 

யூனிட் நிறுவன பொறுப்பாளர் எஸ்.பாஸ்கர் மற்றும் மனிதவள மேலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நேற்று மதியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆக்சிஜன் இயந்திரங்களை வட்டாட்சியர் திருநாவுக்கரசரிடம் வழங்கினார்கள். மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் துணை வட்டாட்சியர் சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments