கொரோனா விழிப்புணர்வு!! - காவல் உதவி ஆய்வாளரின் சிறப்புப் பணி!!

     -MMH
     திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்'வி ராஜா கணேஷ்' அவர்கள், அரசு கொரோனா லாக் டவுன் அறிவித்த பிறகும்  கோரோனா மக்களிடையே அதிகம் பரவி வருவதினால் மக்கள் யாரும் தயவுசெய்து தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், மாஸ்க் அணிந்திருந்தாலும் மக்களிடம் பேசுவதே இடைவெளி விட்டு பேசுங்கள். அவரவர் குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களும் விலைமதிக்க முடியாத உயிர் ஆகும். அதை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு என்ன தான் நமக்கு உதவி செய்தாலும் நம்மளும் அரசு சொல்வதை கேட்டு நடந்தால் மற்றும் இந்த கொடுமையை ஒழிக்க முடியும்.

உங்களுக்கு உடல் பிரச்சினை ஏற்பட்டால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கவும். உதவி ஆய்வாளர் வி' ராஜ கணேஷ்' அவர்கள் இப்பகுதியில் உள்ள  மக்களுக்கு  சுமார் 300 பேருக்கு மாஸ்க் கொடுத்தார். மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார்.

அதேபோல இப்பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக எது நடந்தாலும் தகவல் கொடுக்கலாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு இரவு பகல் பாராமல் குமரலிங்கம் காவல் நிலையத்திற்கு கட்டுப்பட்ட பகுதிகளில் உயரதிகாரிகள் அறிவுரை பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆகையால் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இவரைப் பாராட்டி வருகிறார்கள்.


நாளைய வரலாறு செய்திக்காக,

-துல்கர்னி, உடுமலை.

Comments