தமிழகத்தில் தளர்வுகற்ற ஊரடங்கு ஜூன்-14 வரை நீடிப்பு..!

 

-MMH

      தமிழகத்தில் தளர்வுகற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. எனவே ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கி இருந்தது. 

அதனைத் தொடர்ந்து சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனவே 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கடந்த முறை தடை விதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் இந்த முறையும் தொடர்கின்றன. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அதேபோல் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. 

பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் நோய்தொற்று பரவலாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கண்ட 11 மாவட்டஞ்களில் தனியாக செயல்படும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாளை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை விட கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments