இன்று ஜூன் 1 சர்வதேச பெற்றோர்கள் தினம் மற்றும் உலக பால் தினம்..!!

 

-MMH 

       ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 1 ஆம் தேதி சர்வதேச பெற்றோர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது, மேலும் இதே நாள் உலக பால் தினமாகவும் 2001ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது, நம்மை இவ்வுலகிற்கு பெற்றுத்தந்த பெற்றோர்கள், நம்மை வளர்த்து நம்மைப் பாதுகாத்து அன்பை அள்ளி கொடுத்து, நம்மை நல்வழியில் செயல்படுத்த முதல் ஆசானாய் இருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 அதேபோல்  உலகளாவிய உணவான பாலின்  முக்கியத்துவத்தையும் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நாள் உலக பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பால் உற்பத்தி செய்தும் நாளொன்றுக்கு தனி நபர் ஒருவருக்கு 300 மில்லி பால்  கிடைப்பதன் மூலம் உலகில் மிகப்பெரிய பால்  உற்பத்தியாளராக நம் இந்திய நாடு விளங்குகிறது.

பால் உற்பத்தியினால் மாடு வளர்ப்பு, பால் விற்பனை, தேனீர் கடைகள் மற்றும் இதர பால்  பொருட்களான தயிர் வெண்ணை நெய் போன்ற பொருட்களின் உற்பத்தி, விற்பனை மூலம் பலர்  வாழ்வாதாரம் மேம்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது உள்ள COVID-19 தொற்றுநோய் காலத்தில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாமல் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இந்தியாவில் பால் என்பது அனைவரின் வாழ்க்கையில்  ஒரு முக்கிய பகுதியாகும்,

நாளைய வரலாறு செய்திக்காக

-செய்தியாளர்: குமார் ஊத்துக்குளி.

Comments