ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது !!

  

-MMH

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில்  நேற்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலர் திரு.ஜெகநாதன் அவர்கள் நேரில் சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூபாய் 1 கோடி  காசோலையாக அளித்தார்.. அவருடன் தி இந்து பத்திரிக்கை நிறுவன இயக்குனர் திரு.என்.ராம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின்  இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.சாய் சதீஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கான COVID 19 மற்றும் இதர மருத்துவச் செலவுகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்காக  பல கோடி ரூபாய் காப்பீடு தொகையாக  வழங்கி வருவது மட்டும் அல்லாமல் நமது தமிழக மக்களுக்காக இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ய தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியும் செய்து உள்ளது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்.

 நாளைய வரலாறு செய்திக்காக 

-குமார் நிருபர் ஊத்துக்குளி.

Comments