கோவையில் 25 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை..!!

 

-MMH

      கொரோனா பேரிடர் காலத்தில் 25 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள, கோவையில், பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்கள் ஏராளமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிகிச்சை மையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால், தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நகர்புற ஆராம்ப சுகாதார நிலையம், கொரோனா தடுப்பு காய்ச்சல் முகாம்களில் பணியாற்ற ரூ 60 ஆயிரம் மாத ஓதியத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணையை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இந்த பணி நியமன ஆணை கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்ற இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும், பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ்.V. ஹரிகிருஷ்ணன்.

Comments