திருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்!!

 

-MMH

    திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாநகர துணை ஆணையர் ரயில்வே எஸ்பி இப்பட 27 மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி. ராணிப்பேட்டை ஓம்பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை அத்திப்பள்ளி பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் ஸ்ரீநதா, கடலூர் சக்தி கணேசன், திருச்சி பா. மூர்த்தி, கரூர் சுந்தரவடிவேல், பெரம்பலூர் மணி, அரியலூர் பெரோஸ் கான் அப்துல்லா, புதுக்கோட்டை நிஷா பார்த்திபன்.

திருவாரூர் சீனிவாசன், நாகப்பட்டினம் ஜவகர், மயிலாடுதுறை சுகுணா சிங், நீலகிரி அசிஷ் ராவத், ஈரோடு சசிமோகன், திருப்பூர் சாஷங் சாய், சேலம் ஸ்ரீ அபிநவ், நாமக்கல் சரோஜ் குமார் தாகூர், தர்மபுரி கலைச்செல்வன்.

கிருஷ்ணகிரி சாய் சரண் தேஜஸ்வி, மதுரை பாஸ்கரன், விருதுநகர் மனோகர், சிவகங்கை செந்தில்குமார், தேனி கொங்கரே பிரவீன் உமேஷ், தென்காசி கிருஷ்ணராஜ் ஆகியோர் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய அத்திப்பள்ளி பவன் குமார் ரெட்டி திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மயில்வாகனன் சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ரயில்வே எஸ்பியாக பணியாற்றி வந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாளைய வரலாறு செய்திக்காக 

-செய்தியாளர், குமார்.

Comments