சிங்கம்புணரி அருகே கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை பலி!

-MMH

         சிங்கம்புணரி அருகே மாந்தக்குடிபட்டியைச் சேர்ந்த பெற்றோர், தங்களின் 4 மாதக் குழந்தைக்கு தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் தென்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கிருந்து கடந்த மே 27ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை கொண்டு வரப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது மே 29ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிசு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையுடன், அந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

கொரோனா சிகிச்சையிலிருந்த மிகச்சிறிய வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவே முதல் முறை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments