9 பேர் உயிரிழப்பு கிராமத்தைச் சுற்றி போடப்பட்டது போலீஸ் பாதுகாப்பு..!!

 

-MMH

       வள்ளியூர் கேசவனேரியில் இரண்டு toவாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. ஆனால் அரசு நிர்ணயித்த 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளாமல் சுமார் 200 பேருக்கு மேல் கலந்து உள்ளனர்..

அதிலிருந்து ஒரு வாரத்துக்கு பின்பு சுமார் 45 பேர் (மணமகன் உட்பட) கொரனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. திருமணத்தில் கலந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு மூன்று நாட்கள் கழித்து கேசவனேரி, ராஜபுதூர், வள்ளியூர், பனங்காட்டூர் போன்ற ஊர்களில் உள்ளவர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர்.  (வயது 25-50)

இப்போது கேசவனேரியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து ஊரில் முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கவும், மாஸ்க் அணிந்து வெளியே செல்லவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும். இந்த கொரோனா காலத்தில் அரசு எவ்வளவு கட்டுப்பாடு விதித்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு வந்தால் மட்டுமே, சமுக இடைவெளி கடைப்பிடித்தால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன், தூத்துக்குடி . ஈசா.

Comments