கலைஞர் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொழிலதிபர் இட்லி இனியவன்!!

  -MMH

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் எள்ளுருண்டை  இஞ்சிமரப்பா மற்றும்  கற்கண்டு அவல் பாயாசம் செய்து கலைஞர்  பிறந்தநாளை கொண்டாடினர் சமையல் தொழிலாளிகள் !

சமையல் தொழிலாளிகளுக்கு என்ன தனி நல வாரியம் அமைத்து தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்  பிறந்தநாளை மாநிலத் தலைவர் எம் ஜி ராஜாமணி தலைமையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


தற்போது கொரோனா காலம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் எள்ளுருண்டை  இஞ்சிமரப்பா மற்றும்  கற்கண்டு அவல் பாயாசம் செய்து காவல்துறை போக்குவரத்து காவலர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொடுத்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கலைஞருடைய பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன், மாநில அமைப்பாளர் அகர நாராயணன் மற்றும் சமையல் தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.

2011 ம் ஆண்டு எங்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சமையல் தொழிலாளி என தனி நல வாரியம் அமைக்கப்பட்டது கலைஞர் தலைமையிலான அரசு, அதற்கு அடுத்த வந்த ஆட்சியாளர்கள் அந்த நல வாரியத்தை  கிடப்பில் போட்டுவிட்டார்கள் தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் வாரிய அலுவலர்களை நியமித்து எங்களுக்காக அமைக்கப்பட்ட அந்த நல வாரியத்தை செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இட்லி இனியவன் தெரிவித்துள்ளார்.

மேலும்.இதுதொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் உள்ளதாகவும், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன் குறிப்பிட்டார்.

-ஆர்.கே.பூபதி.

Comments