சிங்கம்புணரி அருகே விவசாயியைக் கொலை செய்த கள்ளக்காதலி!!

    -MMH

சிங்கம்புணரி அருகே பொட்டப்பட்டியிலிருந்து ரெகுநாதபட்டி செல்லும் வழியில் உள்ள மணலிகண்மாய் பாலத்திற்குக் கீழே நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. 

அங்கு சடலமாகக் கிடந்தது, கீழவண்ணாயிருப்பை சேர்ந்த சேதுராமலிங்கம் (50) என்பது தெரியவந்தது. உடனடியாக சேதுராமலிங்கத்தின் மனைவி ஷோபா அளித்த புகாரின் அடிப்படையில் உலகம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில், சேதுராமலிங்கத்திற்கும் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த தில்லைநாயகி(37) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும் சேதுராமலிங்கம் தில்லைநாயகியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்துவைத்துக்கொண்டு தில்லைநாயகிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. சேதுராமலிங்கத்தின் மிரட்டலை அறிந்த தில்லைநாயகியின் தந்தை தங்கவேல்(65), சேதுராமலிங்கத்தை கடந்த 1.6.2021அன்று தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு தில்லைநாயகி, தங்கவேல், தில்லைநாயகியின் தாய் தனபாக்கியம்(55), தில்லைநாயகியின் நண்பர் வெள்ளிக்குன்றாம்பட்டி பூபதி(36) ஆகியோர் சேர்ந்து சேதுராமலிங்கத்திற்கு பாயாசத்தில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தும், கழுத்தை நெறித்தும், வாயில் குறுணை மருந்தை ஊற்றியும், தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்து, உடலை பொட்டப்பட்டியிலிருந்து ரெகுநாதபட்டி செல்லும் வழியில் உள்ள மணலி கண்மாய் பாலத்திற்குக் கீழ் போட்டது தெரியவந்தது.

துரிதமாகச் செயல்பட்டு, 4பேர்மீதும் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படையினரை தென்மண்டல காவல்துறைத் தலைவர் டி.எஸ்.அன்பு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் என்.எம்.மயில்வாகனன் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் மூவரும் வெகுவாக பாராட்டினார்கள். கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

- அப்துல்சலாம் , ராயல் ஹமீது.

Comments