கொரோனாவை மிஞ்சி விடுமோ கருப்பு பூஞ்சை.... அச்சத்தில் மக்கள்.!!

-MMH

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது என்ற செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும்  அதே நேரத்தில் கருப்பு பூஞ்சை நோய் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். தமிழகத்தில்  ஆரம்பத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த  நிலையில் படிப்படியாக உயர்ந்து   இன்றைய நிலவரப்படி 847 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ள நிலையில் போதுமான அளவு மருந்து குப்பிகள் இருப்பில் இருந்தாலும் மேலும் கருப்பு பூஞ்சை நோய் அதிகரித்தால் உடனடியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்னும் கூடுதலாக ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள் பெற்று தயார் நிலையில் வைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

வரும் முன் காப்போம் என்ற சிந்தனையோடு 

-M.சுரேஷ்குமார்.

Comments