ஊரடங்கு மதிக்காமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள்.!நோய் பரவல் ஏற்படும் அச்சத்தில் மக்கள்..!

-MMH

    தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை ரோட்டில் நேற்று ஊரடங்கு அமலில் உள்ள நேரத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், நேற்று தூத்துக்குடியில் உள்ள பாளையங்கோட்டை ரோட்டில் நேற்று ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது அங்கு போலீசார் வாகன சோதனை நிறுத்தி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன் தூத்துக்குடி ஈசா.

Comments