கோவை மக்களின் அலட்சியப் போக்கால் மீண்டும் நோய் பரவல் ஏற்படுமா..!!

-MMH

      கோவை  மக்களின் அலட்சியத்தால் திரும்ப தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.  தனித்திரு விழித்திரு வீட்டில் இரு  ஆனால் கோவை மக்கள்  மட்டும் தேவையில்லாமல்   ரோட்டில்  சுற்றிக்  கொண்டிருப்பார்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தை விட கோவையில் கொரோனா தொற்று  அதிகம்  காணப்படுகிறது.

ஊரடங்குக்கு முன்பு ஆரம்பத்தில் 4268  மேல் கொரோனா  தொற்று  அதிக  அளவில்   பரவியிருந்த சூழ்நிலையில் தற்போது  முழு ஊரடங்குக்கு பின்பு  நேற்று கணக்குப்படி 2990 ஆக படிப்படியாக  குறைந்து கொண்டு  வருவதை பார்க்க முடிகிறது.

ஆனால் கோவை மக்கள் தற்போது அதிக அளவில்                    ஆத்துபாலத்திலிருந்து உக்கடம் செல்லும்  சாலையில்  மற்றும் திருச்சி  சாலையில்   சுங்கம் பகுதியில்  ஆம்புலன்ஸ்  சொல்வதற்கு  கூட வழியில்லாமல் கூட்ட நெரிசலாக  நம்மால்  பார்க்க முடிகிறது தேவையில்லாமல்  வாகனத்தில் சுற்றிதிரிகிறார்கள் காவல்துறை அதிகாரிகள் கேட்டாள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சென்றுவிடுகிறார்கள்.  காவல்துறை முழுமையாக விசாரணை  செய்து தேவை இல்லாமல்  வெளியில்  சுற்றுபவர்களை  கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தால் மட்டுமே முழு ஊரடங்கு போலிருக்கும்  சீக்கிரம்  ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என சமூக ஆர்வலர்களும்  தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஆரோக்கியராஜ் ஈசா.

Comments