பத்திரிகையாளர்களுக்கு தமிமுன்அன்சாரி ஆதரவுக் குரல் !!

 

-MMH

       கொரோனா காலத்தில் ஊடகவியலாளர் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு க்கு ம.ஜ.க பொதுச்செயலாளர் மு.தமிமுன்_அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்  என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அது பாராட்டத்தக்க ஒன்றாகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்துவரும் துயரங்களைக் குறைக்கும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்புகள் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில் ஊடகவியலாளர்கள் இது தொடர்பான இதர கோரிக்கைகளையும் முன் வைக்கிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவசப் பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பு, மிகப்பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு பயனளிக்காமல் போய்விடும் என ஊடகவியலாளர்கள்  கூறுகின்றனர்.

எனவே உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர்கள், சிறப்பு செய்தியாளர்கள் உட்பட நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில் இதை விரிவுப்படுத்துவது குறித்து முதல்வர் அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments